Categories
உலக செய்திகள்

ஒலிம்பிக் ஜோதியை அணைக்க முயற்சி.. பெண்ணை கைது செய்த பாதுகாப்பு படையினர்..!!

ஜப்பானில் ஒலிம்பிக் ஜோதியை ஒரு பெண் நீரைப் பாய்ச்சி அணைக்க முயற்சித்ததால் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஜப்பானில் உள்ள மிட்டோ என்ற நகரில் ஒலிம்பிக் ஜோதியை கொண்டு சென்றனர். அந்த சமயத்தில் பெண் ஒருவர் சாலையோரத்தில் நின்றிருந்தார். அவர் எதிர்பாராத நேரத்தில், திடீரென்று, தான் வைத்திருந்த பொம்மை துப்பாக்கியை கொண்டு தண்ணீரை பாய்ச்சி ஜோதியை அணைக்க முயன்றார்.

மேலும் டோக்கியோவில் ஒலிம்பிக் நடைபெறக்கூடாது என்று அவர் முழக்கமிட்டதாக கூறப்பட்டுள்ளது. எனவே பாதுகாப்பு படையினர் அந்த பெண்ணை கைது செய்துள்ளனர். கொரோனா அச்சம் காரணமாக டோக்கியோவில் ஒலிம்பிக் நடத்துவதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பி வருகிறது.

Categories

Tech |