கனடாவில் லேசர் முடி நீக்கும் அழகு நிலையத்தில் பெண்களிடம் தவறாக நடந்த நபர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் மீது அதிக வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
கனடாவில் உள்ள வான்கூவர் நகரில் Ali Aghasardar என்ற நபர் லேசர் முடி நீக்கும் சிகிச்சை மையத்தில் பணியாற்றி வருகிறார். அப்போது, அந்த சிகிச்சை மையத்திற்கு வந்த பெண் ஒருவரிடம் அவர் தவறாக நடந்திருக்கிறார். மேலும், வேறு ஒரு பெண்ணை ஆடையின்றி நிர்வாணமாக புகைப்படம் எடுத்திருக்கிறார்.
இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், Ali Aghasardar கைது செய்யப்பட்டிருக்கிறார். தற்போது, அவர் மீது பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. எனவே, இவரால் வேறு பெண்கள் பாதிக்கப்பட்டிருந்தால் புகார் தெரிவிக்குமாறு கூறப்பட்டிருக்கிறது.