ஆப்பிரிக்காவில் ஒரு பெண் ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளை பெற்றெடுத்த பின்பு தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை பகிர்ந்திருக்கிறார்.
ஆப்பிரிக்காவில் இருக்கும் மாலி என்ற பகுதியை சேர்ந்த ஹலிமா சிஸ்ஸே என்ற பெண் கடந்த மே மாதத்தில் 9 குழந்தைகளை ஒரே பிரசவத்தில் பெற்றெடுத்தார். இது உலக சாதனையாக பதிவு செய்யப்பட்டது. அவர் கர்ப்பமடைந்திருந்த போது மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், மருத்துவர்கள் ஏழு குழந்தைகள் இருக்கிறது என்று கூறியிருக்கிறார்கள்.
ஆனால் பிரசவத்தின் போது ஆண் குழந்தைகள் 4 மற்றும் பெண் குழந்தைகளை ஐந்து என்று மொத்தமாக ஒன்பது குழந்தைகள் பிறந்திருக்கிறது. ஒன்பது குழந்தைகளையும் ஒரே நேரத்தில் கவனிப்பது தொடர்பில் தன் அனுபவத்தை அவர் கூறியிருக்கிறார்.
“எனக்கு உதவியாக இருக்கும் மருத்துவ குழு மற்றும் நிதி உதவி வழங்கி வரும் மாலி அரசாங்கத்திற்கும் நன்றி தெரிவிக்கிறேன். தற்போது இருக்கும் காலக்கட்டத்தில் ஒரு குழந்தையை வளர்ப்பதே சிரமமாக இருக்கிறது. எனவே, 9 குழந்தைகளை ஒரே நேரத்தில் கவனித்துக்கொள்வது எனக்கு கொடுமையாக இருக்கிறது.
அவர்களுக்கு ஒவ்வொரு நாளும், 100 நாப்கின்களும் 6 லிட்டர் பாலும் தேவைப்படுகிறது. பிரசவத்தின் போது ஒவ்வொரு குழந்தையாக வெளியே வந்தது எனக்கு ஞாபகம் இருக்கிறது. அந்த சமயத்தில் எனக்குள் அதிகமான கேள்விகள் ஓடிக்கொண்டிருந்தது. குழந்தைகள் பிறந்து 5 மாதங்கள் ஆகிவிட்டது. அனைத்து குழந்தைகளும் நன்றாக இருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.