பிரிட்டனில் ஒரு பெண்ணின் உடல், தலை இல்லாமல் கண்டறியப்பட்ட வழக்கில் காவல்துறையினர் ஒரு பெண்ணை கைது செய்துள்ளனர்.
பிரிட்டனில் உள்ள வெம்ப்லியில் இருக்கும் ஒரு குடியிருப்பிலிருந்து கடந்த ஜூன் மாதம் 11ஆம் தேதியன்று Mee Kuen Chong என்ற 67 வயது பெண்மணி காணாமல் போனார். அதன்பின்பு 2 வாரங்கள் கழித்து, 220 மைல்கள் தூரத்தில் இருக்கும் டெவன் பகுதியின் சுற்றுலா தளத்தில் அவரின் சடலம் தலையின்றி கண்டறியப்பட்டது.
இதைத்தொடர்ந்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். தற்போது Jemma Mitchell என்ற 36 வயது பெண் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் Mee Kuen மலேசிய நாட்டை சேர்ந்தவர். கடந்த 30 வருடங்களாக வெம்ப்லியில் வாழ்ந்து வருகிறார். தற்போது கைது செய்யப்பட்ட Jemma-விடம் துண்டிக்கப்பட்ட தலை தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.