கனடாவில் பெண் ஒருவர் ஆண் போன்று நடித்து இணையதளத்தில் பெண்கள் பலரை ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
கனடாவின் ரொறொன்ரோ மாகாணத்தில் வசிக்கும் 69 வயது பெண் Aleth Duell-ஐ காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர் ஆண் போன்று நடித்து, டேட்டிங் இணையதளங்களில் பல பெண்களுடன் அறிமுகமாகியிருக்கிறார். அவர்களுடன் நெருக்கமாக பழகி காதல் வலையில் சிக்க வைத்து, அவர்களிடமிருந்து பணம் பறித்திருக்கிறார்.
இவ்வாறு, பெண்கள் பலரை ஏமாற்றி வலைதளங்களின் மூலம் அதிகமான பண மோசடி செய்திருக்கிறார். இதுமட்டுமல்லாமல், தனக்கென்று, தனியாக வங்கி கணக்கு ஒன்றை தொடங்கி, அதில் பணம் போடுமாறு கூறியிருக்கிறார். அதனை திரும்ப கொடுத்துவிடுவதாக கூறி ஏமாற்றியுள்ளார்.
இவரால் ஏமாற்றப்பட்டவர்கள், ஒன்றாரியோ மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியா போன்ற மாகாணங்களில் அதிகம் இருக்கலாம் என்று காவல்துறையினர் கருதுகிறார்கள். எனவே இது குறித்த தகவல் அறிந்தவர்கள், தங்களிடம் தெரிவிக்குமாறு காவல்துறையினர் கூறுகிறார்கள்.