ஆமெரிக்காவில் மான்களை அழைத்து வந்து வீட்டில் வைத்து உணவு பரிமாறிய பெண் மீது வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அமெரிக்காவில் ஒரு விசித்திர சம்பவம் நடந்துள்ளது. ஆம், அந்த நாட்டின் கொலார்டோ மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் காட்டில் சுற்றி கொண்டிருந்த மான்களை வீட்டிற்குள் அழைத்து வந்து பிரெட், பழங்கள், கேரட் போன்ற உணவுப்பொருட்களை பரிமாறியுள்ளார். அவர் விருந்து வைத்தது மட்டுமில்லாமல் வீடியோவும் எடுத்துள்ளார். அந்த வீடியோ வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது. அதன்பின் அந்த பெண்ணின் மீது கொலார்டோ வனத்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் அவருக்கு 100 டாலரும் அபராதம் விதித்தனர்.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘நீங்கள் இப்படி செய்வதன் மூலம் தற்செயலாக அந்த விலங்குகளை கொல்வதோடு மட்டுமில்லாமல், நீங்களும் உங்களுக்கு தீங்கு விளைவிக்கும் வழியில் செல்கிறீர்கள். உங்களுக்கு செல்லப்பிராணி வளர்க்க ஆசையாக இருந்தால், அனைத்து மக்களுடன் வாழ்ந்து, வளர்ந்து பழகிய நாய், பூனை, ஆடு போன்றவற்றை தேர்வு செய்யுங்கள். மான்கள் உங்கள் வீட்டின் முன் வந்து செல்வதற்கு நீங்கள் நன்றாக பழக்கப்படுத்துகிறீர்கள் என்று சொன்னால், அப்பகுதியில் உள்ள மலை சிங்கங்களையும் உங்கள் வீட்டை சுற்றிலும் இருக்கும்படி விரும்புகிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்’, என்று தெரிவித்தனர்.