பெண் தீடிரென தீ குளித்த சம்பவம் குறித்து காவல் துறையினர் காரணத்தை தேடி வருகின்றனர்.
களியக்காவிளை அடுத்த செம்மன்விளையை சேர்ந்தவர் ரதிஷ் விஜி தம்பதியினர். இத்தம்பதியினருக்கு 7 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
இன்று திடீரென விஜி வீட்டில் இருக்கும் பொழுது தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தனக்குத்தானே தீ வைத்துக் கொண்டார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ரதிஷ் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் விஜியை மீது அருகில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.
பின்னர் அங்கிருந்து திருவனந்தபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார் விஜி.
இது குறித்து தகவலறிந்த களியக்காவிளை காவல்துறையினர் வழக்குப் பதிந்து விஜியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.