Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

இதற்காகவா இப்படி செய்தாய்… பெண் எடுத்த விபரீத முடிவு… தீவிர விசாரணையில் காவல்துறையினர்…!!

குழந்தையை திட்டியதினால் கணவன் மனைவி இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டு பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாடம்பாக்கம் சந்தோஷ் நகர் பகுதியில் ஷோபன்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு தமிழரசி என்ற மனைவியும், பிறகு இருவருக்கும் திருமணமாகி இரண்டு மகள்களும் உள்ளனர். இதில் ஒரு மகள் கீதா 11-ஆம் வகுப்பும் மற்றொரு மகள் ஹரிணி 6- ஆம் வகுப்பும் படித்து வருகிறார்கள். இந்நிலையில் கீதா அதிக நேரம் மொபைல் போனை பயன்படுத்தி வந்துள்ளார். இதனால் தாய் தமிழரசி அவரை கண்டித்துள்ளார். அதன்பின் கோபத்தில் கீதா உணவு சாப்பிடாமல் இருந்துள்ளார்.

இதனையடுத்து அதிகாலையிலிருந்தே கணவன் மனைவி இருவருக்கும் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து தமிழரசி தனது வீட்டின் படுக்கை அரையில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் தற்கொலை செய்து கொண்ட தமிழரசியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |