இரண்டு பிள்ளைகளின் தாய் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள வெள்ளக்கோவில் அருகே அறிவொளி நகரை சேர்ந்தவர் விஜயா. விஜயாவின் கணவர் ராமசாமி. இத்தம்பதியினருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். ராமசாமி தனது மகன் மற்றும் மகளை வெளியில் அழைத்துச் சென்றுள்ள சமயம் வீட்டில் தனியாக இருந்த விஜயா திடீரென தீக்குளிக்க தனக்குத் தானே நெருப்பு வைத்துள்ளார். இதனால் உடல் முழுவதும்நெருப்பு பரவி வலி தாங்க முடியாமல்அலறல் போட்டுள்ளார் விஜயா.
விஜயாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்த பொழுது உடலில் தீ எரிந்த நிலையில் கிடந்த விஜயாவை மீட்டு காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி அளித்த பின்னர் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார் விஜயா. இருந்தும் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு விஜயா உயிரிழந்தார்.
இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.