திருமணமான 11 மாதத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ராஜலட்சுமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பாலு என்பவரை பதினோர மாதங்களுக்கு முன்பாக திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனமுடைந்த ராஜலட்சுமி வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் அவரின் தந்தை மற்றும் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்தத் தகவலின் படி விரைந்து சென்ற குடும்பத்தினர் ராஜலட்சுமி உடலை கண்டு கதறி அழுதுள்ளனர்.
அதற்கு பிறகு வந்த காவல்துறையினர் மர்மமான முறையில் வீட்டில் பிணமாக தொங்கிய ராஜலட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதையடுத்து பெரியசாமி தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் சந்தேகத்திற்குரிய மரணம் என வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ராஜலட்சுமியின் சாவுக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணமாகி 11 மாதங்களில் இளம் பெண் மர்மமான முறையில் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.