Categories
Uncategorized தர்மபுரி மாவட்ட செய்திகள்

குடும்ப தகராறு காரணத்தினால்… பெண் எடுத்த விபரீத முடிவு… உத்தரவிட்ட உதவி கலெக்டர்…!!

குடும்ப தகராறு காரணத்தால் மனமுடைந்த பெண் தீ குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பெரியபள்ளம் பகுதியில் ரங்கன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கவுதமி என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் கவுதமிக்கும் புதுசாம்பள்ளியில் வசிக்கும் பாபு என்பவருக்கும் சென்ற 7 மாதங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றுள்ளது.

இதனையடுத்து கவுதமிக்கு பாபுக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த கவுதமி தன்னுடைய தாய் சித்ரா வீட்டிற்கு சென்றுள்ளார். அதன்பின் மனமுடைந்த நிலையில் இருந்த கவுதமி அதிகாலையில் யாரும் இல்லாத சமயத்தில் தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டு தற்கொலை செய்துள்ளார்.

இதனை தொடர்ந்து கவுதமியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதில் அங்கு கவுதமியை பரிசோதனை செய்த மருத்துவர் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளார். மேலும் திருமணமாகி 7 மாதத்திற்குள் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது பற்றி உதவி கலெக்டர் தீவிர விசாரணை நடத்துமாறு காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |