Categories
தேசிய செய்திகள்

தொடர்ந்து 4 பெண் குழந்தைகள்…. கணவர் கூறிய ஒரு வார்த்தை…. வழக்கு தொடர்ந்த மனைவி…!!

பெண் குழந்தைகளை பெற்றதால் எனது கணவர் முத்தலாக் கூறி விட்டார் என பெண் வழக்கு பதிவு செய்துள்ளார்

உத்தரகாண்ட் மாநிலம் காஷிபூரைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவர் தனக்கு பெண் குழந்தை பிறந்ததால் முத்தலாக் கூறி விவாகரத்து செய்துவிட்டதாக வழக்குப்பதிவு செய்துள்ளார். அதில், எட்டு வருடங்களுக்கு முன்பு எங்களுக்கு திருமணம் நடந்தது. நான் தொடர்ந்து நான்கு பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்த காரணத்தினால் என்னை எனது மாமியார் மிகவும் கொடுமைப்படுத்தி வந்தார்.

இந்நிலையில் எனது கணவர் ஒரு பெண்ணை கடந்த ஆண்டு ரகசிய திருமணம் செய்துகொண்டார். இந்த தகவல் தற்போது எனக்கு தெரியவர கணவரிடம் கேட்டதற்கு என்னை அடித்து துன்புறுத்த தொடங்கினார். பின்னர் ரகசியத் திருமணம் செய்து கொண்ட பெண்ணையும் என்னையும் ஒரே வீட்டில் தங்க வைக்க நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம். இதனை தொடர்ந்து எனது கணவர் உறவினர்கள் முன்னிலையில் முத்தலாக் கூறி விட்டார்” குறிப்பிடப்பட்டிருந்தது

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |