பெண் விமான நிலையத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்தமான் தீவில் பீர்முகமது என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாத்திமா என்ற மனைவி இருந்துள்ளார். இவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், கேரளாவிற்கு சென்று சிகிச்சைப் பெறவேண்டும் என்ற நோக்கில் இருந்துள்ளார். அதன்படி அந்தமானில் இருந்து சென்னைக்கு வந்த பாத்திமா அங்கிருந்து கோயம்புத்தூர் சென்று, பின் கேரளா செல்வதற்கு திட்டமிட்டுள்ளார். அந்த திட்டத்தின்படி பாத்திமா சென்னைக்கு வந்துள்ளார்.
கோயம்புத்தூர் செல்வதற்காக விமான நிலையத்தில் காத்திருந்துள்ளார். அப்போது விமானத்திற்காக காத்திருந்த பாத்திமா திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்த மக்கள் விமான நிலைய மருத்துவக் குழுவிற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து விரைந்து வந்த மருத்துவ குழுவினர் பாத்திமாவை சோதித்துப் பார்த்துவிட்டு அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த விமான நிலைய காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.