ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த பெண் அந்நாட்டை விட்டு வெளியேறி அமெரிக்க ராணுவ விமானத்தில், சென்றபோது அவருக்கு விமானத்திலேயே பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான்கள் கைப்பற்றியதால், மக்கள் ஆயிரக்கணக்கில் தங்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகிறார்கள். அமெரிக்க ராணுவ வீரர்கள், தங்களின் உயிரை பணயம் வைத்து இரவு பகலாக அந்நாட்டு மக்கள் காபூலில் இருந்து வெளியேற உதவி வருகிறார்கள்.
மேலும், தலிபான்கள் காபூல் விமான நிலையத்திலிருந்து செல்லும் மக்களை தடுக்க மாட்டோம் என்று அறிவித்து விட்டனர். எனவே, காபூல் விமான நிலையத்தில் மக்கள் கூட்டம் குவிந்து காணப்படுகிறது. இந்நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவர் அமெரிக்க c- 17 வகை ராணுவ விமானத்தில் பயணித்தபோது நடுவானில் அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டிருக்கிறது.
Medical support personnel from the 86th Medical Group help an Afghan mother and family off a U.S. Air Force C-17, call sign Reach 828, moments after she delivered a child aboard the aircraft upon landing at Ramstein Air Base, Germany, Aug. 21. (cont..) pic.twitter.com/wqR9dFlW1o
— Air Mobility Command (@AirMobilityCmd) August 21, 2021
இதனால், விமானத்தை உடனடியாக ஜெர்மனியில் இருக்கும் ராணுவ விமானதளத்தில் தரையிறக்கினர். விமானத்தில் இருந்த மருத்துவ குழுவினர், அவருக்கு பிரசவம் பார்த்தனர். அந்த பெண்ணிற்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தாயும் குழந்தையும் நலமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.