ஸ்விட்சர்லாந்தில் ஒரு மருத்துவர் மேற்கொண்ட அறுவை சிகிச்சையில் அந்த பெண் உயிரிழந்ததால், அவர்மீது கொலை குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஸ்விட்சர்லாந்தில் உள்ள Uznach என்ற பகுதியில் ஒரு பெண்ணிற்கு பித்தப்பையை நீக்கும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. சுமார் 5 மணி நேரமாக நடந்த அறுவை சிகிச்சையில் அந்தப் பெண்ணிற்கு ரத்த கசிவு அதிகம் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். எனவே அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர் மற்றும் துணை மருத்துவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கடந்த 2017 ஆம் வருடத்தில் இச்சம்பவம் நடந்த நிலையில் தற்போது இதற்கான தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அந்த மருத்துவர், 400 பிராங்குகள் ஒவ்வொரு நாளும், 80 நாட்களுக்கு அபராதம் செலுத்தவும், உயிரிழந்த பெண்ணின் கணவருக்கு 35,000 பிராங்குகள் இழப்பீடும், அந்த பெண்ணின் தாய்க்கு 15,000 பிராங்குகள் இழப்பீடும் கொடுக்க வேண்டும் என்றும், நீதிமன்றத்தின் விசாரணைக்கு 33,000 பிராங்குகள் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.