Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

அழைத்து சென்ற காதலன்…. இளம் பெண்ணுக்கு நடந்த விபரீதம்…. பெற்றோரின் பரபரப்பு புகார்….!!

மொட்டை மாடியிலிருந்து தவறி விழுந்து இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அண்ணாநகர் பகுதியில் இளங்கோ என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கூலி தொழிலாளியான மாதேஸ்வரன் என்ற மகன் இருக்கின்றார். இதனை அடுத்து சென்னை மாவட்டத்தில் உள்ள கண்ணகி நகரில் சங்கர் என்பவர் வசித்துவருகிறார்.

இவருக்கு +2 படிப்பை முடித்த சரிதா என்ற மகள் இருந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மாதேஸ்வரன் சரிதாவிடம் திருமணம் செய்து கொள்வதாக கூறி திருவண்ணாமலை மாவட்டத்திற்கு அழைத்து வந்து உறவினர் வீட்டில் தங்க வைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து சரிதாவின் பெற்றோர் மகளை காணவில்லை என்று சென்னை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சரிதாவை தீவிரமாக தேடி வந்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் 27 – ம் தேதியன்று சரிதா தன் தங்கியிருந்த வீட்டிலுள்ள மொட்டை மாடியில் செல்போன் பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது சரிதா எதிர்பாராதவிதமாக மொட்டை மாடியிலிருந்து தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.

இது குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் சரிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மாதேஸ்வரனை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |