சென்னையில் அரசியல் கட்சி பிரமுகர் இல்ல திருமண விழாவிற்காக வைக்கப்பட்டிருந்த பேனர் பெண் மீது சாய்ந்து அவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பல்லாவரம், கல்பாக்கம் ரேடியன் சாலையில் இருசக்கர வாகனத்தில் சுபஸ்ரீ என்ற கல்லூரி மாணவி வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த சாலையின் தடுப்புகள் அருகில் இருக்கக்கூடிய மண்டபத்தில் அதிமுக பிரமுகரின் நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. பேனர்கள் மற்றும் கொடி கம்பங்கள் வைக்கப்பட்டிருந்தன. தொடர்ச்சியாக பல்வேறு இடங்களில் பேனர் வைக்கப்பட்டு இருந்தது.
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த பெண் மீது அந்த பேனர் விழுந்தவுடன் அவர் நிலை தடுமாறி விழுந்திருக்கிறார். வேகமாக பின்னால் வந்த லாரி அவர் மீது ஏறி அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடனடியாக அதிர்ச்சி அடைந்த வாகன ஓட்டிகள் இது தொடர்பாக பரங்கிமலை காவல்நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போக்குவரத்து புலனாய்வு துறை விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
தற்போது பெண்ணின் உடல் மீட்கப்பட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த சாலையின் மீது வைக்கப்பட்டிருந்த பேனர்கள் மற்றும் கொடிக்கம்பங்கள் உடனடியாக அகற்றக் கூடிய பணி தற்பொழுது அகற்றபட்டு வருகிறது. அனுமதி இன்றி வைக்கக்கூடிய பேனர்களுக்கு நடவடிக்கை எடுக்கவேண்டுமென பலமுறை நீதிமன்றமும் கூறிவந்ததது குறிப்பிடத்தக்கது.