கன்னியாகுமரி மாவட்டம் திருநந்திக்கரை பகுதியில் வசித்து வருபவர் தோட்ட தொழிலாளி ஜான்சன். இவருக்கு விமலா என்ற மனைவி உள்ளார்.. இவர்கள் இருவருக்குமிடையே கடந்த சில நாள்களாக குடும்பத் தகராறு இருந்துவந்துள்ளது.. இந்நிலையில் நேற்று (ஜூன் 29) மீண்டும் ஜான்சனுக்கும், விமலாவுக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த ஜான்சன் வீட்டை விட்டு வெளியில் சென்றுள்ளார்..
இது குறித்து கேட்பதற்கு அக்கம்பக்கத்தினர் விமலா வீட்டுக்கு சென்றுள்ளனர்.. அப்போது விமலா வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளதைப் பார்த்து அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து அவர்கள் போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் கொடுத்தனர்.. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விமலாவின் உடலை மீட்டு ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அதைத்தொடர்ந்து குலசேகரம் போலீசார் கணவர் ஜான்சனிடம் விசாரணை நடத்தினர்..
சடலத்தை பார்த்தால் கட்டி தொங்கவிட்டதைப் போன்ற நிலையில், இருந்ததன் காரணமாக போலீசார் ஜான்சனை ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.