இங்கிலாந்து நாட்டில் ஒரு பெண் மாங்காய் ஊறுகாய் சாப்பிட்டதால் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும் நிலைக்கு தள்ளப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து நாட்டில் வசிக்கும் ஒரு பெண், மருத்துவமனைக்கு சென்று தன்னால் உணவு பொருட்களை எளிதாக விழுங்க முடிவதில்லை என்று கூறியிருக்கிறார். மருத்துவர் அவரை பரிசோதித்து விட்டு தொண்டை பகுதியில் எந்த பிரச்சனையும் இருப்பதாக தெரியவில்லை, தொண்டையில் உண்டான சிறிய கீறல் அல்லது குடலில் இருக்கும் பிரச்சனையால் விழுங்க முடியாமல் இருக்கலாம் என்று தெரிவித்திருக்கிறார்.
வேறு ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் மருத்துவமனைக்கு வாருங்கள் என்று கூறி அனுப்பி வைத்திருக்கிறார். நான்கு நாட்கள் கழித்து மீண்டும் மருத்துவமனைக்கு வந்த அந்த பெண்ணிற்கு sepsis என்ற கடுமையான பிரச்சனையின் அறிகுறிகள் இருந்திருக்கிறது. எனினும் அவரின் தொண்டையில் எந்த பிரச்சினையும் இல்லை என்றே மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள்.
எனவே, சில மருத்துவமனைகளோடு ஆலோசனை நடைபெற்றது. அதன்படி, அந்த பெண் வேறு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அந்த பெண்ணிற்கு அறுவை சிகிச்சை செய்திருக்கிறார்கள். அப்போது தான், அதிர்ச்சிகரமான உண்மை தெரியவந்திருக்கிறது. அதாவது, அந்த பெண் மாங்காய் ஊறுகாய் சாப்பிட்டிருக்கிறார்.
அதில் இருந்து சிறிய மாங்கோட்டை அவரின் தொண்டையை கிழித்திருக்கிறது. பொதுவாக இறைச்சி சாப்பிடும் போது அதில் இருக்கும் எலும்பு, தொண்டையில் குத்தும். எனவே, அதற்கு என்ன செய்யலாம்? என்பதற்கு வழிமுறைகள் இருக்கின்றன. ஆனால் மாங்கொட்டை தொண்டையில் மாட்டிக் கொண்டால் என்ன செய்யலாம்? என்பது பற்றிய வழிமுறைகள் கிடையாது.
எனினும் அந்த பெண்ணிற்கு தொண்டையில் அறுவை சிகிச்சை மேற்கொண்டு தொடர்ந்து ஒரு வாரமாக சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதன் பிறகு, குணமடைந்து அந்த பெண் வீடு திரும்பி இருக்கிறார்.