Categories
உலக செய்திகள்

கேன்ஸ் திரைப்படவிழாவில் பரபரப்பு…. உக்ரைனுக்கு ஆதரவாக… அரைகுறை ஆடையுடன் வந்தப் பெண்…!!!

கேன்ஸ் திரைப்பட விழா நடந்துகொண்டிருந்த சமயத்தில் ஒரு பெண் அரை நிர்வாணமாக ஓடிவந்ததால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது தொடர்ச்சியாக போர் தொடுத்துக் கொண்டிருக்கிறது. மேலும் அந்நாட்டில் ரஷ்ய படையினர் கைப்பற்றிய பகுதிகளில் இருக்கும் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கேன்ஸ் திரைப்பட விழா நடந்து கொண்டிருந்தபோது உக்ரைன் நாட்டில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் வன்முறையை எதிர்த்து போராடிய ஒரு பெண் அரை நிர்வாணமாக சிவப்பு கம்பளத்தில் ஓடியிருக்கிறார்.

அவர், ‘எங்களை பாலியல் வன்கொடுமை செய்வதை நிறுத்துங்கள்’ என்று கத்தியவாறு தன் உடையை கழற்றிவிட்டு அரைகுறையாக நின்றிருக்கிறார். மேலும், அந்தப் பெண் தன் உடலில் உக்ரைன் நாட்டின் கொடியை வரைந்துள்ளார். அதில், ‘எங்களை பலாத்காரம் செய்வதை நிறுத்து’ என்று எழுதப்பட்டிருக்கிறது. அதனைத்தொடர்ந்து, அதிகாரிகள் அந்த பெண்ணின் மீது ஆடையை போர்த்தி அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.

Categories

Tech |