பிரிட்டனில் 31 வயதுடைய பெண்ணை மூன்று இளைஞர்கள் சேர்ந்து உயிரோடு தீ வைத்து எரித்த கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டரின் Bury என்ற பகுதியில் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் ஒரு பெண்ணை மூவர் சேர்ந்து உயிரோடு தீ வைத்துள்ளனர். இதனைப்பார்த்து பதறிய அங்கிருந்த மக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சில நிமிடங்களில் காவல்துறையினர் சம்பவ இடத்தை அடைந்தனர்.
அங்கு, அந்த பெண் உடல் முழுக்க தீக்காயங்கள் ஏற்பட்டதால் அலறி துடித்துக்கொண்டிருந்தார். அவரை, காவல்துறையினர் உடனடியாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் அவர் பரிதாபமாக பலியானார். இச்சம்பவம் தொடர்பில் மூன்று இளைஞர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.