Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BREAKING : தூத்துக்குடியில் கொரோனா பாதித்த பெண் உயிரிழப்பு …!!

தூத்துக்குடியில் கொரோனா பாதித்த பெண் உயிரிழந்துள்ளது அம்மாவட்ட மக்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே மிரட்டி வருகிறது. தினமும்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்புகளும் அதிகரித்து வருவதால் உலக மக்களிடையே அச்சம் எழுந்துள்ளது. கடந்த சில வாரங்களாக இந்தியாவிலும் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் கொரோன வைரஸின் தாக்கத்திற்கு தமிழகமும் தப்ப வில்லை.

இந்தியாவில் கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்கள் 2ஆம் இடத்தில உள்ள தமிழகத்தில் 834 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டு 8 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் தூத்துக்குடியில் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை 9ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் 21 பேர் குணமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |