பிரான்சில் மனைவியை கொலை செய்த நபருக்கு நீதிமன்றத்தில் நேற்று 22 வருடங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
பிரான்ஸ் நாட்டுக்குரிய Corsica என்ற தீவில் Bruno Garcia-Cruciani என்ற நபர் தன் மனைவி Julie Douib ஐ துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளார். அதற்கு முன்பாக Julie தன் கணவர் மிரட்டல் விடுப்பதாகவும், தன்னை கொடுமை செய்வதாகவும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு முடிவுக்கு வந்த நிலையில், Julie யை அவரின் கணவர் கொலை செய்தது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
பெண்கள் மீது நடத்தப்படும் வன்முறைகளை எதிர்த்து அதிக பேரணிகள் நடத்தப்பட்டது. ஆனால் Bruno தன் மனைவி விபத்தால் இறந்ததாக நீதிமன்றத்தில் கூறினார். எனினும் அவர் தன் மனைவியை சுடுவதற்கு முன்பாக, இணையதளங்களில் மரண தண்டனை குறித்தும் தாய்லாந்து நாட்டிற்கு சென்று எவ்வாறு வாழ்வது? என்பது தொடர்பாகவும் தேடியுள்ளார். அந்த ஆதாரங்கள் மாட்டியது.
எனவே அவர் கூறியதை நீதிபதி ஏற்க மறுத்தார். மேலும் திட்டமிட்டு கொலை செய்ததாக உறுதிப்படுத்தி அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து, 22 வருடங்களுக்கு ஜாமீனில் வெளி வராதபடி சிறையில் அடைக்க உத்தரவிட்டார். மேலும் அவரின் இரு மகன்களையும் அவரது பராமரிப்பில் விடுவதற்கும் நீதிமன்றம் மறுத்துவிட்டது.