Categories
உலக செய்திகள்

ரத்தம் சொட்ட குழந்தையுடன் ஓடி வந்த தாய்.. பின்னணியில் இருந்த அதிர்ச்சிகரமான உண்மை..!!

இத்தாலி நாட்டில் ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்குள் ரத்தம் சொட்ட குழந்தையை வைத்துக்கொண்டு பெண் ஓடி வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இத்தாலியில் 44 வயதுடைய Katalin Erzsebet Bradacs என்ற பெண், ரத்தம் சொட்ட தன் 2 வயது குழந்தை Alex Juhasz-உடன் சூப்பர் மார்க்கெட்டுக்குள் ஓடிவந்து உதவி கேட்டு அழுதிருக்கிறார். உடனடியாக மருத்துவ உதவிக்குழுவினர் விரைந்து வந்து குழந்தையை பரிசோதித்துள்ளனர்.  அங்கிருந்தவர்கள் அந்த பெண்ணிற்கு முதலுதவி சிகிச்சை அளித்துள்ளனர்.

குழந்தைக்கு கழுத்து மற்றும் மார்பு பகுதிகளில் ஒன்பது தடவை கத்தியால் குத்தப்பட்ட காயங்கள் இருந்திருக்கிறது. குழந்தை உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர். அதன்பின்பு காவல்துறையினர், Katalin-வை சோதித்துள்ளனர். அப்போது அவரின் கைப்பையில் ஒரு கத்தி இருந்திருக்கிறது.

உடனடியாக காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர். மேலும் அருகில் இருக்கும் ஒரு பழைய கட்டிடத்தில் அந்தப் பெண் மற்றும் குழந்தையின் உடைகள் ரத்த கறைகளுடன் கண்டறியப்பட்டிருக்கிறது. இதனிடையே, சூப்பர் மார்க்கெட்டுக்குள் நுழைவதற்கு முன்பு அந்தப் பெண், காயங்களுடன் இருக்கும் தன் குழந்தையை புகைப்படம் எடுத்து ஹங்கேரியில் இருக்கும் தன் கணவர் Norbert Juhasz-க்கு அனுப்பியிருக்கிறார்.

அதன்பின்பு, குழந்தையின் தந்தை Norbert Juhasz தான் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதாவது, தம்பதிகள் இருவரும் கடந்த மாதம் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். நீதிமன்றத்தில் குழந்தை தந்தையிடம் இருக்க வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

ஆனால், Katalin, குழந்தையை கணவரிடமிருந்து பறித்துக்கொண்டு ஹங்கேரியிலிருந்து இத்தாலிக்கு தப்பிச் சென்றிருக்கிறார். தற்போது தன் கணவரை பழிவாங்கும் நோக்கில் குழந்தையை கொன்றுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். எனினும் விசாரணையில், என் குழந்தையை நான் ஒன்றும் செய்யவில்லை என்று கூறிக்கொண்டிருக்கிறார்.

Categories

Tech |