பெண்ணை எரித்துக் கொலை செய்த மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
கள்ளகுறிச்சி மாவட்டத்தில் உள்ள மயிலாம்பாறை காட்டுப்பகுதியில் உள்ள முட்தோப்பில் ஒரு பெண் எரிந்த நிலையில் இறந்து கிடந்துள்ளார். இதனை பற்றி தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பெண்ணின் உடலை பார்வையிட்டு அக்கம்பக்கத்தில் விசாரணை நடத்தியுள்ளனர்.
இந்த விசாரணையில் இறந்து கிடந்த பெண் சோழம்பட்டு கிராமத்தைச் சார்ந்த வெண்ணிலா என்பது தெரியவந்துள்ளது. இவரது கணவனான முருகேசன் 13 வருடங்களுக்கு முன்பே இறந்துவிட்டார். வெண்ணிலா கூலி வேலை செய்து தனது இரண்டு பிள்ளைகளையும் வளர்த்து வந்துள்ளார். மேலும் வெண்ணிலா எதற்காக கொலை செய்யப்பட்டார் ? அவரை கொலை செய்தவர்கள் யார் ? என்ற விவரம் இன்னும் தெரியவரவில்லை.
இதனையடுத்து காவல்துறையினர் வெண்ணிலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து வெண்ணிலாவை கொலை செய்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இதற்கிடையே வெண்ணிலா கொலை செய்யப்பட்டு கிடந்த இடத்தில் தடயங்களை விழுப்புரம் வட்டார தடவியல் நிபுணர் சேகரித்து சென்றுள்ளனர்.