ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் பெண் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதையடுத்து கள்ளக்காதலன் போலீசாரால் கைது செய்யப்பட்டான்
கர்நாடக மாநிலம் சீரங்கப்பட்டினத்தை சேர்ந்தவர் தேவி. இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பே ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள மூலக்கடை பகுதியில் குடிபெயர்ந்து வந்து வாடகை வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை மதியம் தேவி வீட்டில் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் இறந்து கிடந்துள்ளார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து விரைந்து வந்த போலீசார் தேவி உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளியை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள ஏரியூர் கிராமத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவனை பிடித்து விசாரணை செய்ததில் முறையற்ற உறவு இருந்ததாகவும், தன்னிடம் வாங்கிய பணத்தை திருப்பித்தராத காரணத்தால் ஆத்திரத்தில் தேவியின் கழுத்தை அறுத்து கொலை செய்ததை ஒப்புக் கொண்டான். ராமகிருஷ்ணனை போலீசார் சத்தியமங்கலம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோபி மாவட்ட சிறையில் அடைத்தனர்.