சீனாவில் ஒரு பெண், 10 வருடங்களாக தன் வீட்டை விட்டுக்கொடுக்காமல் அரசின் திட்டத்தையே மாற்ற செய்துவிட்டார்.
சீனாவில் ஒரு நெடுஞ்சாலை அமைக்க திட்டமிடப்பட்டது. அப்போது அப்பகுதியில் இருக்கும் ஒரு வீட்டின் பெண் உரிமையாளரான Liang என்பவர் தன் வீட்டை காலி செய்ய மாட்டேன் என்று அடம்பிடித்துள்ளார். அந்த இடத்திற்கு மாற்றாக இழப்பீட்டு தொகை அளிப்பதாக ரியல் எஸ்டேட் நிறுவனம் கூறியது.
அதற்கும் அவர் உடன்படவில்லை. சுமார் பத்து வருடங்களாக அந்த பெண்ணிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அவர் வீட்டை விடவில்லை. எனவே அதிகாரிகள் அதிரடி முடிவை எடுத்துள்ளார்கள். நெடுஞ்சாலை அமைத்துவிட்டனர். அந்த வீடு அப்படியேதான் இருக்கிறது. அதாவது அந்த வீட்டைச் சுற்றிலும் அழகாக வளைவாக நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது.
அந்த பெண், தன் வீட்டிற்கு மாற்றாக வேறு சிறந்த இடத்தை அரசு அமைத்துக் கொடுக்கவில்லை. எனவே தான் தன் வீட்டைவிட்டு செல்ல மறுத்ததாக கூறியுள்ளார். தற்போது இரண்டு சாலைகளுக்கு இடையில் அந்த வீடு அமைந்திருப்பதால் பிரபலமானதாக மாறிவிட்டது.