ஆஸ்திரேலியாவில் ஒரு பெண் ஹோட்டலில் தனிமைப்படுத்தி இருந்தபோதும் சிகரெட்டை ட்ரோன் மூலம் வரவழைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலிய நாட்டில் இருக்கும் குயின்ஸ்லாந்து என்ற பகுதியில் இருக்கும் ஒரு ஓட்டலில் பணியாற்றும் ஊழியர் ஒரு ட்ரோன் வந்து கொண்டிருப்பதை பார்த்திருக்கிறார். எனவே உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். காவல்துறையினர் விசாரித்தபோது அந்த ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒரு பெண் சட்டவிரோதமாக ட்ரோன் மூலம் சிகரெட் வரவழைத்துள்ளார் என்று தெரியவந்துள்ளது.
அந்த பெண், தனிமைப்படுத்தப்பட்ட நிலையிலும் தன் பழக்கத்தை அடக்கிக் கொள்ள முடியாமல் ஓட்டலுக்குள் சிகரெட் வரவழைத்ததால் அவருக்கு 1300 டாலர்கள் அபராதம் விதித்துள்ளனர். மேலும் அந்த ட்ரோனை இயக்கிய ஒரு நபரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதாவது நாட்டில் ஓட்டலில் தனிமைப்படுத்ததில் இருக்கும் நபர்கள் தங்களுக்கு பிடித்த உணவை மட்டுமே வெளியில் ஆர்டர் செய்து வாங்கிக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.