கனடா நாட்டில் பழங்குடியின பெண்களும், கர்ப்பிணிகளும் பாதிக்கப்படுவது தொடர்ந்து வருகிறது.
கனடாவில் பழங்குடியின பெண்கள் பலர், தங்கள் அனுமதியின்றி, கருத்தடை அறுவை சிகிச்சை மருத்துவர்கள் மேற்கொண்டதாக புகார் தெரிவித்துள்ளனர். கடந்த 2018 ஆம் வருடத்தில் ஹெய்தி நாட்டில் வசிக்கும் கருப்பினத்தைச் சேர்ந்த ஒரு பெண், ஒரு மொன்றியல் மருத்துவமனையில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அப்போது, அறுவை சிகிச்சை செய்து அவருக்கு பிரசவம் நடந்துள்ளது. மேலும், மருத்துவர் கருத்தடை அறுவை சிகிச்சை செய்யலாமா? என்று கேட்டுள்ளார். அந்த பெண் வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார். ஆனால், பிரசவம் முடிந்து இரண்டு மாதங்கள் கழித்து அந்தப் பெண் மருத்துவரை அணுகிய போது தான் அவருக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருப்பதை அறிந்திருக்கிறார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் புகார் தெரிவித்துள்ளார். ஆனால் விசாரணை நடத்தப்பட்டதில், அந்தப் பெண் கருத்தடை அறுவை சிகிச்சைக்கு சம்மதித்ததாக மருத்துவர் கூறியிருக்கிறார். இதேபோன்று கறுப்பின பெண்கள் பலருக்கு அவர்களின் அனுமதி இல்லாமலேயே கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருக்கிறது.
இதில், சில பெண்கள் பிரசவ வலியில் சுய நினைவில்லாமல் சம்மதித்துள்ளனர். சில பெண்கள் சம்மதிக்கவில்லை என்றால் தங்களை ஏதேனும் செய்து விடுவார்களோ? என்ற அச்சத்தில் சம்மதித்திருக்கிறார்கள். மேலும், சில பெண்களை மருத்துவர்களை மிரட்டி கருத்தடை அறுவை சிகிச்சை செய்துள்ளனர். இவர்கள் அனைவருமே கருப்பின பெண்கள் அல்லது பழங்குடியினர்.