Categories
உலக செய்திகள்

“உங்களால தா கொரோனா வந்துச்சு!”…. சீனரை வெளுத்து வாங்கிய பெண்….!!

கனடா நாட்டில் ஒரு பெண், சீனாவை சேர்ந்த ஒரு நபரை திட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கனடாவில் உள்ள மொண்ட்ரியல் பகுதியில் இருக்கும் ஒரு சூப்பர் மார்கெட்டிற்கு Ken Mak என்ற சீனாவை சேர்ந்த நபர் தன் காதலியுடன் வந்திருக்கிறார். அப்போது அங்கிருந்த பெண் ஒருவர், அவரின் அருகில் சென்று, “நீங்கள் சீனாவை சேர்ந்தவரா?” என்று கேட்டிருக்கிறார். அதற்கு அவர் ஆமாம் என்று கூறியிருக்கிறார்.

உடனே கோபமடைந்த அந்த பெண், “உங்களால் தான் கொரோனா உருவானது, சீன மக்களால் தான்” என்று அவரை திட்டியிருக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் பரவி வருகிறது. காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு சென்ற பின்பு தான் அந்த பெண் அங்கிருந்து  சென்றிருக்கிறார். இதற்கு, மொண்ட்ரியல் மேயர் எதிர்ப்பு தெரிவித்ததோடு, இதனை ஏற்க முடியாது” என்று கூறுகிறார்.

Categories

Tech |