போலி சுகாதார பாஸ் வழங்கிய பெண் ஒருவருக்கு பிரான்சில் ஒரு வருடம் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
பிரான்சில் உருமாறிய பீட்டா வகை வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் நீண்டதூரம் பயணம் மேற்கொள்பவர்களுக்கு சுகாதார பாஸ் கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சுகாதார பாஸ் இல்லாதவர்களுக்கு ரயிலில் பயணிப்பதற்கு தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சுமார் 200 பேருக்கு போலி சுகாதார அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், Seine-Saint-Denis என்ற மாவட்டத்தில் பெண் ஒருவர் போலி சுகாதார பாஸ் வழங்கிய வழக்கில் ஒரு ஆண்டு சிறை தண்டனை பெற்றதாகவும் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் கைது செய்யப்பட்ட அந்த பெண் தனது வாடிக்கையாளர்களை ஸ்னாப்சாட் என்ற சமூக வலைதளம் மூலம் தேடி கொண்டதாகவும், 200 யூரோவிலிருந்து 400 யூரோக்கள் வரை ஒவ்வொரு சுகாதார பாஸிற்கும் அவர் பெற்று கொண்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.