Categories
தேனி மாவட்ட செய்திகள்

பெண்ணுக்கு பாலியல் தொல்லை… 2 ஆண்டுகளாக நடைபெற்ற வழக்கு… நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!

பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்து கொலை செய்ய முயன்ற சைக்கிள் கடைக்காரருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிபதி தீர்பளித்துள்ளார்.

தேனி மாவட்டம் சின்னமனூரை அடுத்துள்ள எரசக்கநாயக்கனூர் பகுதியில் சின்னச்சாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் சைக்கிள் பழுது பார்க்கும் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு சின்னச்சாமி அதே பகுதியில் வசிக்கும் 58 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதற்கு அந்த பெண் மறுத்ததால் ஆத்திரமடைந்த சின்னசாமி அங்கிருந்த அரிவாளால் அவரை தாக்கியுள்ளார்.

இதில் பலத்த காயமடைந்த பெண் இச்சம்பவம் குறித்து சின்னமனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப்புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் சின்னச்சாமியை கைது செய்து தேனி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியுள்ளனர். இதனையடுத்து இந்த வழக்கு கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் இதற்க்கான தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததால் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்றதற்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், 15 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அபராதம் செலுத்த தவறினால் கூடுதலாக ஒரு ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்படும் என நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். இதனை தொடர்ந்து சின்னசாமியை காவல்துறையினர் மதுரை மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

Categories

Tech |