Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“சொத்து விவகாரம்” மனைவிக்கு கத்தி குத்து….. கணவன் தற்கொலை…… விழுப்புரத்தில் சோகம்….!!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன் தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பகுதியை அடுத்த கொடியும் புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவர்  தனது முதல் மனைவி இறந்த உடன் இரண்டாவதாக வண்ணமயில் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்கள் இருவருக்கும் இரண்டு மகள்கள் உள்ள நிலையில் தனக்கு சொந்தமான நிலத்தை முதல் மனைவி மகளுக்கு  சுப்பிரமணி எழுதி வைத்தால் இரண்டாவது மனைவி அவ்வபோது சுப்பிரமணியுடன் சண்டையிட்டு வந்ததாக கூறப்படுகிறது.

Related image

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை ஏற்பட்ட தகராறு முற்றியதன் காரணமாக மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த சுப்பிரமணி தானும் கழுத்தை அறுத்து கொண்டு தற்கொலைக்கு முயற்சி  செய்துள்ளார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து காவல்நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட வழக்கு பதிவு செய்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

Categories

Tech |