குவைத்தில் பெண் ஒருவர் ஒன்பதாம் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குவைத்தில் இருக்கும் அல் ஃபர்வானியா பகுதியில் 60 வயதான எகிப்து நாட்டை சேர்ந்த அல் ராய் என்ற பெண், கட்டிடத்தின் 9-ஆம் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
இச்சம்பவம் தற்கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. குவைத்தில் கடந்த வருடத்தில், 41 தற்கொலை வழக்குகளும், 43 தற்கொலை முயற்சிகளும் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்குகளை சரியாக கையாள, உள்துறை அமைச்சகம், பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகுந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
உலகிலேயே மிகவும் நீளமான பாலங்களில் ஒன்றாக விளங்கும் ஷேக் ஜாபர் காஸ்வேயில் அதிக தற்கொலைகள் நடப்பதாக தெரிவிக்கப்பட்டது. எனவே, குவைத் அரசு, அங்கு பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.