Categories
உலக செய்திகள்

தன் பணத்தை தானே திருடிய பெண்…. லெபனான் நாட்டில் வினோத சம்பவம்…!!!

லெபனான் நாட்டில் ஒரு பெண் தன் சகோதரியின் புற்றுநோய்க்கு சிகிச்சை செய்ய தன் வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை தானே திருடியிருக்கிறார்.

லெபனான் நாட்டில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. இதனால், அங்கு வறுமை மற்றும் வேலை வாய்ப்பின்மை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், அந்நாட்டில் வங்கிகளில் இருந்து வாடிக்கையாளர்கள் தங்கள் பணத்தை எடுப்பதற்கே பல கட்டுப்பாடுகள் இருக்கிறது. எனவே, அவசரத்திற்கு மக்களால் தங்கள் பணத்தை எடுக்க முடியவில்லை.

இந்நிலையில் சலி ஹபீஸ் என்ற பெண் தன் சகோதரிக்கு புற்றுநோய் இருப்பதால் சிகிச்சைக்காக ஒரு வங்கியில் தன் கணக்கில் பணத்தை எடுக்க முயற்சித்திருக்கிறார் ஆனால் அங்கு மக்கள் தங்கள் கணக்கிலிருந்து மாதம் ஒன்றிற்கு இருநூறு டாலர்கள் தான் எடுக்க வேண்டும். எனவே, தன் சகோதரியின் சிகிச்சையை அவரால் மேற்கொள்ள முடியாமல் போனது.

இவ்வாறான நிலையில், தன்னைப்போல் பாதிப்படைந்த தன்னார்வலர்களுடன் சேர்ந்து டம்மியான துப்பாக்கியை வைத்து ஊழியர்களை மிரட்டி வங்கியில் இருக்கும் தன் பணத்தை திருடியிருக்கிறார். காவல் துறையினர் வருவதற்கு முன்பாக வங்கியின் பின்பக்கத்தில் இருக்கும் ஜன்னலை உடைத்துவிட்டு தப்பிவிட்டார். இவை அனைத்தையும் இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்பியிருக்கிறார்.

Categories

Tech |