லண்டனில் வசிக்கும் ஒரு பெண் ஏலத்தில் கிடைத்த அதிக விலை மதிப்புள்ள பொருளை கல் என்று நினைத்து குப்பையில் வீசியிருக்கிறார்.
லண்டனில் ஒரு பெண், ஏலத்தில் ஒரு கல்லை வாங்கியிருக்கிறார். அதாவது, சில வீடுகளில் பழங்காலத்திலிருந்து பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கும் பொருட்களை வைத்து ஏலம் நடத்தப்படும். அந்த வகையில், இவருக்கு பளபளப்பான கல் ஏலத்தில் கிடைத்திருக்கிறது. அந்த கல் சுமார் 20 கோடி மதிப்பு கொண்டது. அதனை அறியாமல், அந்த பெண் சாதாரண கல் என்று எண்ணி அதனை குப்பைத்தொட்டியில் வீசி விட்டார்.
இதைப்பார்த்த அவரின் நெருங்கிய உறவினர் ஒருவர், ஒருவேளை இது விலைமதிப்பு அதிகமுள்ள கல்லாக இருக்க வாய்ப்பிருக்கிறது, எனவே, ஒருமுறை பரிசோதனை செய்யலாம் என்று கூறியிருக்கிறார். இதனால், அந்தக் கல்லை ஏலம் எடுக்கும் நிபுணர்களிடம் கொடுத்து பரிசோதனை செய்யுமாறு கூறியிருக்கிறார்.
எதிர்பாராத வகையில், அந்தக்கல் விலையுயர்ந்த வைரம் என்று தெரியவந்திருக்கிறது. பரிசோதித்துப்பார்த்ததில் அதன் மதிப்பு 2 மில்லியன் யூரோக்கள் என்று கூறப்பட்டுள்ளது. அதாவது, இந்திய மதிப்பில் சுமார் 20 கோடி. மேலும் இது 34 கேரட் வைரம். இதனைக் கேட்ட உடனே அந்த பெண் மகிழ்ச்சியில் உச்சத்திற்கு சென்றார். எனவே காரணமின்றி எந்த ஒரு பொருளையும் தூக்கி வீசக்கூடாது என்பது இதன் மூலம் தெரிந்துவிட்டது.