அமெரிக்காவில் 2 கட்டிடங்களுக்கு நடுவில் நிர்வாணமாக ஒரு பெண் மாட்டிக்கொண்ட நிலையில் பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு மீட்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கார் ஸ்டீரியோ விற்பனை கடை மற்றும் ஆட்டோ பாடி ஷாப் இரண்டு கட்டிடங்களுக்கு நடுவில் ஒரு பெண் நிர்வாண நிலையில் மாட்டிக்கொண்டார். எப்படி மாட்டிக்கொண்டார் என்பது தெரியப்படுத்தப்படவில்லை. அருகில் பணியாற்றும் தொழிலாளர்கள் மற்றும் கடையின் உரிமையாளருக்கு பெண்ணின் அழுகுரல் நீண்ட நேரமாக கேட்டுள்ளது. எனவே காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
எனினும் அந்த பெண் எங்கிருந்து கூச்சலிட்டார் என்பதை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. அதன் பின்பு காவல்துறையினர் வந்து, இரு கட்டிடங்களின் இடைவெளியில் மாட்டி துடித்துக்கொண்டிருந்த பெண்ணை பார்த்துவிட்டனர். அந்தப் பெண் அதிக வலியால் கதறி அழுது கொண்டே இருந்துள்ளார். மேலும் தலைகீழாக நிர்வாணமான நிலையில் கிடந்துள்ளார். மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
OCFA technical rescue team is on scene in the 1020 block of N Harbor Blvd in @CityofSantaAna attempting to get to get an adult female wedged between two walls out. pic.twitter.com/fvBznHlUrg
— OCFA PIO (@OCFireAuthority) July 13, 2021
அந்த பெண்ணை மீட்பது அவர்களுக்கு சாதாரணமாக இருக்கவில்லை. மிகவும் சவாலாக இருந்துள்ளது. எனவே நீண்ட நேரமாகப் போராடி பல திட்டங்களை கையாண்டு பல்வேறு முயற்சிகளுக்கு பின்பு போராடி ஒருவழியாக பாதுகாப்பாக அவரை மீட்டு விட்டனர். அதன் பின்பு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.