மின்வேலியில் சிக்கி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கீழ்செம்பேடு கிராமத்தில் ஏழுமலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மல்லிகா என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த ஜூலை 31 – ஆம் தேதியன்று மல்லிகா தனது விவசாய நிலத்திற்கு சென்று மாட்டிற்காக புல்லை அறுவடை செய்துகொண்டு வீடு திரும்பியுள்ளார். இதனை அடுத்து ஆறுமுகம் என்பவர் அவரது கரும்பு தோட்டத்தில் காட்டுப்பன்றிகாக மின்வேலி அமைத்துள்ளார்.
இந்த மின்வேலியில் எதிர்பாராதவிதமாக மல்லிகா சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மல்லிகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஆறுமுகத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.