Categories
மாநில செய்திகள்

பெண் சாமியார் பிரக்யா சிங் தாகூர் எம்.பி.க்கு வந்த மர்ம விஷம் தடவிய கடிதம்…! போலீஸில் புகார் 

பெண் சாமியார் பிரக்யா சிங் தாகூர் எம்.பி.க்கு வி‌ஷ ரசாயனம் தடவப்பட்டு வந்த கடிதத்தில் தனக்கு கொலை மிரட்டல் விடப்பட்டுள்ளது.என அவர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

மத்தியபிரதேசத்தை சேர்ந்த பெண் சாமியார் பிரக்யா சிங் தாகூர். இவர் தற்போது எம்.பி.யாக இருக்கிறார். அடிக்கடி சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிடுவது அவரது வழக்கம்.

இந்நிலையில்  அவருக்கு கடந்த மாதம் அக்டோபரில் ஒரு கடிதம் வந்ததாகவும், அந்த கடிதத்தை இப்போது தான் பிரித்தது படித்ததாகவும் பிரக்யா எம்.பி. கூறி இருக்கிறார்.  அந்த கடிதத்தில் தனக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதாகவும்.கடிதங்கள் உருது மொழியில் எழுதப்பட்டு இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இதுபற்றி தனது அலுவலகம் உள்ள போபால் கமலா நகர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளதாகவும் கூறினார்.அந்த கடிதத்தில் வி‌ஷ ரசாயனம் தடவப்பட்டிருந்ததாகவும், இதனால் தனது கையில் அரிப்பு ஏற்பட்டதுடன் தோல் நோய் தொற்று உருவானதாகவும் அவர் கூறியுள்ளார்.

இது குறித்து போலீசார் கூறியதாவது: தடயவியல் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விஷ கடிதத்தை அனுப்பியது யார், எங்கிருந்து வந்தது என்பது குறித்து விசாரித்து வருவதாக கூறியிருக்கின்றனர்.

Categories

Tech |