Categories
கரூர் மாவட்ட செய்திகள்

சேலை அணிந்த மர்மநபர்… கடுமையாக தாக்கப்பட்ட மூதாட்டி… பின் ஏற்பட்ட இழப்பு…!!

மூதாட்டியை கட்டையால் தாக்கி விட்டு தங்கச் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

கரூர் மாவட்டத்திலுள்ள பழையூர் கிராமத்தைச் சார்ந்தவர் ஜெயராஜ். இவர் ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர். இவருடைய மனைவி விஜயலட்சுமி என்பவர் நேற்று காலை காவிரி ஆற்றங்கரை பகுதிக்கு சென்றுள்ளார். பின்னர் மீண்டும் திரும்பி வரும்போது வழியில் ஒரு மர்ம நபர் சேலையை அணிந்து தலையில் துணியை போர்த்தியபடி உட்கார்ந்து இருந்துள்ளார்.

இந்நிலையில் விஜயலட்சுமி அந்த மர்மநபரை கடந்து சென்றபோது அவரது தலையில் அந்த மர்மநபர் பலமான பொருளால் அடித்து தாக்கிவிட்டு அவர் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றுள்ளார். அதன்பின் ரத்த காயங்களுடன் வீட்டின் அருகே வந்த விஜயலட்சுமி சத்தமிட்டு அனைவரையும் கூப்பிட்டுள்ளார்.

இந்த சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தில்இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்தபோது விஜயலட்சுமி ரத்த வெள்ளத்தில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து அவரை மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து குளித்தலை காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அவர்கள் வழக்கு பதிவு செய்து மூதாட்டியை தாக்கி விட்டு தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |