திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே இரண்டாவது காதலனுடன் சேர்ந்து முதல் காதலனை கொலை செய்த பெண்ணை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியை அடுத்த ஒளிபட்டு பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் கடந்த 18ம் தேதி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதையடுத்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில், இறந்தவர், ஆரணி சைதாப்பேட்டையை சேர்ந்த கிருஷ்ணவேணி என்ற பெண்ணை 8 ஆண்டுகளாக காதலித்து வந்ததும்,
திருமணத்திற்கு மறுத்த கிருஷ்ணவேணி அதே பகுதியை சேர்ந்த அஜித்குமார் என்பவருடன் பழகி வந்ததாகவும் கூறப்படுகிறது. இதற்கு சுரேஷ் எதிர்ப்பு தெரிவித்ததால் கிருஷ்ணவேணி அஜித்குமார் ஆகியோர் சேர்ந்து சுரேஷை ஏமாற்றி வரவழைத்து கொலை செய்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அஜீத் குமாரை நேற்று கைது செய்த அதிகாரிகள் கிருஷ்ணவேணியை தேடி வருகின்றனர். இதையடுத்து அஜித்குமார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.