Categories
அரசியல் மாநில செய்திகள்

மகளிர் , குழந்தைகள் நல அணி – தேர்தலுக்கு தயாராகும் மக்கள் நீதி மய்யம் …!!

சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு மக்கள் நீதி மய்யம் கட்சியில் பல்வேறு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அடுத்த ஆண்டு தமிழகத்தில் சாட்டசபை தேர்தல் நடைபெற இருக்கின்றது. தேர்தலுக்கு தயாராகும் வகையில் அரசியல் கட்சியினர் தங்களின் கட்டமைப்பை வலுப்படுத்தி வருகின்றனர். வரக்கூடிய தேர்தல் நடந்து முடிந்த தேர்தலை விட வித்தியாசமானது. மாபெரும் ஆளுமைகளாக இருந்து வந்த கலைஞர் கருணாநிதி , செல்வி ஜெ.ஜெயலலிதா இல்லாமல் நடைபெற இருக்கும் சட்டசபை பொதுத்தேர்தல். ஏற்கனவே மக்களவை தேர்தல் நடைபெற்றதில் திமுக பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றியது.

இதில் முதன்முதலாக களம்கண்ட மக்கள் நீதி மய்யம் கணிசமான வாக்குகளை பெற்றது. இதனிடையே வருகின்ற சட்டசபை பொதுத்தேர்தலில் வலுவான வெற்றியை பெறுவதற்கு கட்சியின் கட்டமைப்பில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அந்த வகையில் நேற்று  மக்கள் நீதி மய்யம் தொழிலாளர் அணிகளுக்கான மண்டல துணைச் செயலாளர்கள், ஆதி திராவிடர் நல அணிகளுக்கான மண்டல துணைச் செயலாளர் மற்றும் மாவட்ட செயலாளர்கள் என பல்வேறு பொறுப்புகள் அறிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து இன்று மக்கள் நீதி மய்யம் மகளிர் மற்றும் குழந்தைகள் நல அணி பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல மக்கள் நீதி மய்யம் கட்சியின் கட்டமைப்பு செயலாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளார்.

Categories

Tech |