பெண்களும் குவைத் தேசிய ராணுவ சேவையில் பணிபுரிய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெண்களும் குவைத் தேசிய ராணுவ சேவையில் பணிபுரிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் குவைத் தேசிய ராணுவ சேவையில் பெண்களுக்கும் பதிவு தொடங்கப்படும் என்று குவைத் நாட்டின் துணை பிரதமர் ஷேக் ஹமத் அல் அலி அல் சபா தெரிவித்துள்ளார். ஏற்கனவே குவைத் காவல்துறையில் கடந்த 20 வருடங்களாக பெண் அதிகாரிகள் பணிபுரிந்து வருகின்றனர்.
அந்த வகையில் ராணுவ சேவையில் பணி புரிவதற்கும் தற்போது பெண்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் குவைத் அரசு ஆரம்பத்தில் ராணுவ துணை பணிகள் மற்றும் ராணுவ மருத்துவ சேவை உள்ளிட்ட பணிகளில் பெண்களுக்கு இடம் அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.