கொரோனா ஊரடங்கால் பெண்களுள் பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கப்படலாம் என்று ஐ.நா அகதிகள் நிறுவனம் எச்சரித்துள்ளது.
கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு நெருக்கடி காலத்தில் இடம்பெயர்ந்துள்ள பெண்கள் மற்றும் சிறுமிகள் பாலியல் ரீதியிலான வன்முறைக்கு ஆளாக்கப்படுவார்கள் என்று ஐக்கிய நாடுகளின் அகதிகள் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து யு.என்.எச்.சி.ஆர் உதவி உயர் ஆணையர் மில்லியன் ட்ரிக்ஸ் தெரிவித்ததில், ஊரடங்கு காலகட்டத்தில் புலம்பெயர்ந்து இருக்கும் பெண்கள், அகதிகள், குழந்தைகள் கட்டாய திருமணத்துக்குள்ளாக்கப்படுவதோடு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படலாம்.
கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அனைவரும் வீட்டிற்குள் முடங்கி கிடக்கின்றனர். போக்குவரத்து முழுவதும் தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் நாடுகளில் உள்ள அகதிகள், இடம்பெயர்ந்து வந்த நாடற்ற பெண்கள் மற்றும் சிறுமிகள் ஆகியோரின் பாதுகாப்பில் முழு கவனம் செலுத்த வேண்டும்.
இடம்பெயர்ந்து பிற மாநிலங்களுக்கு சென்று ஊரடஙகால் அங்கு அவதிப்படும் பெண்களுக்கு ஆபத்து ஏற்படக் கூடும். அவர்களை யாரும் துஷ்பிரயோகம் செய்து வன்முறைக்குள்ளாக்கப்படுவார்கள். இதில் இருந்து தப்பிக்கும் பெண்களுக்கு உதவி செய்ய யாரும் இல்லை. இந்த காலகட்டத்தில் இவர்களை துஷ்பிரயோகம் செய்பவர்கள் தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம்.
வருமானம் இல்லாமல் பசி பட்டினியால் இருப்பவர்கள் பாலியலுக்கு உட்படுத்தப்படுவார்கள். குழந்தைகள் இருக்கும் குடும்பத்தினரால் குழந்தை திருமணங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் அவர்களின் மீது தனி கவனம் செலுத்த வேண்டுமென உலக நாடுகளுக்கு ஐநா அகதிகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.