Categories
உலக செய்திகள்

“இனி ஆண்களிடம் அனுமதி பெற தேவையில்லை” பெண்கள் வெளிநாடுகளுக்கு பயணம்செய்யலாம்… சவூதி அரசு அதிரடி…!!

சவூதி அரேபியாவில் ஆண்களிடம்  அனுமதி பெறாமலேயே பெண்கள் வெளிநாடுகளுக்கு பயணம் செய்யலாம் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

சவுதி அரேபியாவில் வசித்து வரும் எந்த ஒரு பெண்ணாக இருந்தாலும் வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டுமென்றால் தங்கள் கணவர், தந்தை அல்லது பாதுகாவலராக இருக்கும்  ஆணிடம் அனுமதி பெற்றே செல்ல வேண்டும் என்ற விதிமுறை நீண்ட காலமாக இருந்து வந்தது. சவூதியின்  இந்த விதிமுறைகள்  ஆணாதிக்கத்தின் உச்சம் என சர்வதேச அளவில் கடும் விமர்சனங்கள் எழுந்தது.

Image result for Saudi Arabia women

இந்த நிலையில் தற்போது  சவூதி அரேபிய அரசு அந்த விதியை நீக்கியுள்ளது.அதன்படி 21 வயதைக் கடந்த பெண்கள் அனைவரும் பாஸ்போர்ட் பெற்றுக்கொள்ளலாம் எனவும், தங்கள் குடும்பத்தில் உள்ள ஆண்களிடம்  அனுமதி பெறாமலேயே வெளிநாடுகளுக்கு பயணம்செய்யலாம் எனவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. சவூதியின் இந்த அறிவிப்பை பல்வேறு நாடுகளும் தங்களது  பாராட்டுகளை தெரிவித்து வருகிறது.

Categories

Tech |