வீட்டு வேலை செய்யச் சொன்னதால் மருமகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மாட்டூர் கிராமத்தை சேர்ந்த தம்பதியினர் வெங்கடேசன்-தீபா.வெங்கடேசன் கூலித்தொழில் செய்து வருகிறார் .நேற்று முன்தினம் தீபாவை வெங்கடேசனின் தாயார் உண்ணாமலை வீட்டு வேலை செய்ய அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த தீபா தூக்கு மாட்டி தற்கொலை செய்துள்ளார்.
இதுகுறித்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீபாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் தீபாவின் தந்தை தனது மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.