கணவன் மனைவி இடையே தகராறு பெண் தற்கொலை செய்துகொண்டார்.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள அயோத்தி பட்டி காலனியை சேர்ந்தவர் தினேஷ்வரன் மகாலட்சுமி தம்பதியினர். கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதியினருக்கு இடையே கடந்த சில மாதங்களாக கருத்து வேற்றுமை இருந்து வந்து உள்ளது.
இதனால் அவர்களுக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. எப்போதும் போல் நேற்றும் கணவன் மனைவி இடையே சண்டை வந்துள்ளது . இதில் மன வருத்தம் அடைந்த மகாலட்சுமி வீட்டில் யாரும் இல்லாத சமயம் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இத்தகவலை அறிந்த சேடபட்டி காவல்துறையினர் விரைந்து வந்து மகாலட்சுமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருமணமாகி ஒன்றரை ஆண்டுகள் ஆன நிலையில் தற்கொலை செய்து கொண்டதால் கோட்டாட்சியர் விசாரணை நடைபெற்று வருகிறது.