Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கொடுமை செய்தால்… பெண் எடுத்த விபரீத முடிவு… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

வரதட்சணை கொடுமையால் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வெளாகுளம் கிராமத்தில் அருள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திவ்யா என்ற மனைவி உள்ளார். இவர்கள் இருவருக்கும் திருமணமாகி ஏழு மாதங்கள் ஆகிய நிலையில் திவ்யா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் அதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் திவ்யா ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வரதட்சணை கொடுமை காரணத்தால் திவ்யா தற்கொலை செய்து கொண்டாரா இல்லை வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |