Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

என்னவா இருக்கும்… எதனால் இந்த விபரீத முடிவு… தீவிர விசாரணையில் காவல்துறையினர்…!!

பெண் காவல்துறை ஏட்டு தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கோவிந்த தாஸ் பகுதியில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தேவி கருமாரி என்ற மனைவி உள்ளார். இவர் இம்மாவட்டத்தின் ரயில்வே காவல் நிலையத்தில் காவல்துறை ஏட்டாக‌ வேலைப் பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் காவல் துறை சார்பாக புதிதாக துவங்கிய குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிராக நடக்கின்ற குற்றங்களை தடுக்கும் பிரிவில் வேலைப் பார்த்து வந்துள்ளார். இதனையடுத்து தேவி கருமாரி உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

அதன்பின் சிகிச்சை முடிந்து வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் போது திடீரென தூக்குபோட்டு தற்கொலை செய்துக்கொண்டார். அப்போது வெளியில் சென்றிருந்த அவரின் கணவர் சிவகுமார் வீட்டிற்குள் வந்து பார்த்த போது தேவி கருமாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுபற்றி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தத் தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தேவி கருமாரி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |