டிராக்டர் மோதி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மணியம்பட்டி பகுதியில் சோத்திரம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இவர்கள் இருவரும் ராஜலட்சுமியின் தாயாரான சின்னதாயின் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சமுத்திரக்கனி என்பவரின் டிராக்டர் எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து நேர்ந்துள்ளது. இந்த விபத்தில் கணவன் மனைவி இருவரும் பலத்த காயம் அடைந்துள்ளனர்.
இதனை பார்த்ததும் அருகில் உள்ளவர்கள் இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு ராஜலட்சுமி பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் சோத்திரதை தீவிர சிகிச்சை பிரிவின் கீழ் அனுமதித்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் ராஜலட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் டிராக்டர் டிரைவரான சமுத்திரக்கனியை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.